
தேவனுடைய திட்டங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை. உதாரணமாக, இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பிறக்க வேண்டுமென்பதை முன்னறிவித்த ‘’எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே… இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு வருவார்’’ என்ற மீகா 5:2 (கி.மு. 719) திரு வசனத்தை அறிவோம். இந்த தீர்க்கதரிசன வசனம் நிறைவேற, நாசரேத்தில் வாழ்ந்து வந்த மரியாள் பெத்லகேமிற்கு வரவேண்டியதாயிருந்தது. அதற்கு அவள் யோசேப்பின் மனைவி ஆக வேண்டியிருந்தது. வருவதற்கு, ரோமாபுரியிலிருந்து அகஸ்து ராயன் எனப்படும் அகஸ்டஸ் சீசர் குடிமதிப்பு எழுதப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்க வேண்டியிருந்தது. அந்தக் கட்டளையால் ரோம சாம்ராஜ்யம் முழுவதுமே அல்லல் பட வேண்டியதாயிருந்தது.
அது போலவே சின்னஞ்சிறிய இஸ்ரேல் நாடு பிறக்க, உலகமே இரண்டு மகா யுத்தங்களால் பிரசவ வேதனைப்பட வேண்டியதாயிருந்தது. அந்தப் பிரசவத்தில், ஏறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளாய் இல்லாமல் இருந்த ஓர் தேசம், இஸ்ரேல் என்ற பெயரில் மீண்டும் பிறந்தது.
தங்களுக்கென ஒரு நாடு இல்லாமல், உலகமெங்கும் வாழ்ந்து வந்த யூத மக்கள் பலஸ்தீனா எனப்பட்ட இன்றைய இஸ்ரேலில் போய்க் குடியேற ஒரு பிரகடனமே காரணமாக இருந்தது. அந்தப் பிரகடனம் உருவாவதற்கும் வெளிப்படுவதற்கும் ’முதலாம் உலக மகா யுத்தம்’ (FIRST WORLD WAR) தான் காரணமாக இருந்தது. பூர்வ இஸ்ரேலின் உருவாக்கத்தில் பல்வேறு அதிசயங்களையும் அற்புதங்களையும் நிகழ்த்திய நம் தேவனாகிய கர்த்தர், நவீன இஸ்ரேலின் உருவாக்கத்திலும் அப்படிப்பட்ட அதிசயங்களை நிகழ்த்தினார்.
முதலாம் உலக யுத்தத்தில் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நட்பு நாடுகள் ’கோர்டைட்’ எனும் வெடிமருந்தை பொதுவான குண்டுமருந்துகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தின. இந்தப் புகையில்லா வெடிமருந்தை 1889-ம் ஆண்டிலிருந்தே தயாரித்துப் பயன்படுத்தி வந்தது பிரிட்டன். ஏனெனில், அந்த கோர்டைட்டையே பிரிட்டிஷ் இராணுவமும் அதன் கடற்படையும் தங்கள் பீரங்கிகளிலிருந்து குண்டுவீசுவதற்கு பயன்படுத்தி வந்தன. மேலும் தரைப்படை மற்றும் கடற்படை விமானங்களின் இறக்கைகளை நீர்ப்புகாமற் பாதுகாக்கவும் உறுதிப்படுத்தவும் தீ எதிர்ப்பு பூச்சாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தன.
1914-ம் வருடத்தில் ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் தொடங்கிய யுத்தம், பல நாடுகளின் பங்களிப்பில் உலக மகா யுத்தமாக மாறியது. யுத்தக்காலத்தில் கோர்டைட்டை உற்பத்தி செய்வதற்கு அசிட்டோனின் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்தது. இப்படி இரண்டு வகைகளிலும் அசிட்டோனின் தேவை பிரிட்டனுக்கு அதிகரித்தது. வழக்கமாகத் தேவைப்படும் மரங்களின் டன் கணக்கை விட இப்போது பலமடங்கில் மரங்கள் தேவைப்பட்டன. ஆனால், அந்த மரங்களை பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்த ஜெர்மனி ஆஸ்திரியா நாடுகளோ, பிரிட்டனுக்கு எதிர் வரிசையில் யுத்தம் செய்து கொண்டிருந்தன. செய்வதறியாமல் தவித்தது பிரிட்டன். யுத்தத்தில் பிரிட்டனின் நட்பு நாடுகளாக இருந்த பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவும் கோர்டைட்டையே பயன்படுத்தி வந்தன என்றாலும், அவையும் யுத்தத்தில் இருந்ததால் அவற்றிடமிருந்து பெற முடியாத சூழ்நிலை. இன்னொரு நட்பு நாடான அமெரிக்காவிடமோ அது அரிதான விநியோகமாகவே இருந்தது.
அசிட்டோன் உற்பத்தியும் தடைபட, பீரங்கிகள் மற்றும் துப்பாக்கிகளுக்கான குண்டுகள் இல்லாமல் தோல்வி பயத்தில் தத்தளித்தது இங்கிலாந்து. யுத்தம் இன்னும் பெரிதாகிக்கொண்டே போக, பீரங்கி குண்டுகளின் தேவையும் பெரிதாகிக்கொண்டே போனது.
அவமானகரமான தோல்வியை சந்தித்த பிரிட்டன்
இப்படிப்பட்ட சூழ்நிலையில், யுத்தம் தொடங்கிய துவக்கத்தில், 1915 பிப்ரவரி முதல் 1916 ஜனவரி வரையிலான ஒரு வருட காலத்தில், ஒட்டமான் துருக்கி பேரரசின் முக்கிய நிலைகள் மீது ’கல்லிபோலி’ என்ற இடத்தை மையமாகக் கொண்டு தொடர் தாக்குதல்களை நிகழ்த்தியது பிரிட்டன். உடன் பிரான்ஸ் மற்றும் ரஷ்ய படைகளும் கூட்டணி அமைத்துத் தாக்குதல் நிகழ்த்தின. ஆனாலும், யுத்தத்தின் முடிவில் ஒட்டமான் துருக்கி மாபெரும் வெற்றிபெற, பிரிட்டனோ மாபெரும் தோல்வியைச் சந்தித்தது. ’கல்லிபோலியில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வி ஒருபுறம் (humiliating defeat). அசிட்டோன் இல்லாமையால் பீரங்கி குண்டுகள் பற்றாக்குறை மறுபுறம் (lack of artillery shells). தொடர்ந்து யுத்தத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என கலங்கியது. பிரிட்டன் அதிகாரமட்டத்தில் பிரச்சனைகள் வெடித்தன.
வெளியேற்றப்பட்ட பிரதமர் ஹெர்பர்ட் ஹென்றி!
பிரிட்டன் பிரதமர் ஹெர்பர்ட் ஹென்றி அஸ்க்வித் மீது அதிருப்திகள் வெடித்தன. அவர் பிரதமர் பதவியிலிருந்து கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக, டேவிட் லாயிட் ஜார்ஜ் பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், ஹெர்பர்டின் அமைச்சரவையில் யுத்த அமைச்சராகப் பணியாற்றி வந்தவர். லாயிட் பிரிட்டனை யுத்தத்தில் வெற்றியை நோக்கி நகர்த்தியதோடு, 1918-இல் யுத்தம் முடிவுக்கு வந்த பிறகும் 1922 வரையிலும் பிரதமராகத் தொடர்ந்தார்.
டேவிட் லாயிட் ஜார்ஜூம் அவர் தலைமையில் பிரிட்டனும் வெற்றிகரமான பயணம் துவங்கியதற்குக் காரணமே செய்ம் வீஸ்மான் யூதர் தான். இவருக்கும் பிரிட்டனின் உயர் மட்டத்திலிருப்பவர்களுக்கும் ஏற்பட்ட உறவு, உலக யுத்தத்தில் பிரிட்டனின் எழுச்சிக்கும், உலக வரலாற்றில் இஸ்ரேலின் எழுச்சிக்கும் வித்திட்டது.
பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் வீஸ்மானிடம், ’’அசிட்டோன் மருந்தை பெரிய அளவில் தயாரித்துத் தர முடியுமா’’ என்று கேட்க, அதற்கு ’’தேவையான சோளம் வகைகளும் தொழிற்சாலையும் கொடுத்தால் வேண்டிய அளவு தயாரித்துத் தருகிறேன்’’ எனக் கூறினார் வீஸ்மான்.
யார் இந்த செய்ம் வீஸ்மான்?
ஸ்விட்சர்லாந்திலுள்ள ஜெனிவா பல்கலைக்கழகத்தில் வேதியியல் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த செய்ம் வீஸ்மான், 1904-இல் இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் மூத்த பேராசிரியராகப் பணி நியமனம் பெற்று, இங்கிலாந்தில் குடியேறினார்.
வெய்ஸ்மான் செயல்முறை!
பேராசிரியராகப் பணியாற்றி வந்தாலும், தனிப்பட்ட ஆராய்ச்சி நடவடிக்கைகளிலும் வீஸ்மான் ஈடுபட்டு வந்தார். அவற்றில் ஒன்றுதான் அசிட்டோன் தயாரிப்பு. இவர், மக்காச்சோளம் மற்றும் உருளைக்கிழங்குகளிலிருந்து அசிட்டோன் எனும் வேதி பொருளைப் பிரித்தெடுப்பதில் வெற்றி கண்டார். அசிட்டோன் உற்பத்தியின் இந்த புதிய முறை “வெய்ஸ்மேன் செயல்முறை” என்று அறியப்பட்டது.
செய்ம் வீஸ்மான் கண்டுபிடித்திருந்த அசிட்டோன் எனும் வேதிப்பொருளே ’கோர்டைட்’ தயாரிப்பில் மிக முக்கிய அங்கமாக இருந்தது. அசிடோனை ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒருவகை மரத்திலிருந்து அசிட்டிக் அமிலத்தை பிரித்தெடுப்பதன் மூலம் தயாரித்து வந்தது பிரிட்டன். ஒரு டன் அசிட்டோன் தயாரிக்க அசிட்டிக் அமிலத்தன்மை கொண்ட 100 டன் மரங்கள் தேவைப்படும். ஆனால், அதே அசிட்டோனை இங்கிலாந்தில் விளைந்த சோளம் மற்றும் உருளைக்கிழங்குகள் மூலம் தயாரிப்பதில் வெற்றி கண்டிருந்தார் வீஸ்மான்.
வெற்றிக்கூட்டணி
இந்த செயல்முறையின் விரைவான போர்க்கால விரிவாக்கம், ஆய்வகத்திலிருந்து தொழில்துறை அளவிற்கு, தொழில்துறையில் பயன்படுத்தப்படும் நுண்ணுயிரியல் செயல்முறைகளில் அசாதாரணமானது மட்டுமல்லாமல், இரண்டாம் உலகப் போரின்போது பென்சிலின் உற்பத்தியை விரைவாக விரிவுபடுத்துவதற்கும், பயன்படுத்தப்பட்ட உயிரி தொழில்நுட்ப செயல்முறைகளின் பரந்த அளவிற்கும் இது ஒரு முன்னுதாரணமாக அமைந்தது. அது பின்னர் வந்தது.
தடையில்லா அசிட்டோன் உற்பத்தி
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் எல்லா நாடுகளிலுமிருந்தும் சோள வகைகள் கொண்டு வரப்பட்டன. தொழிற்சாலைகள் தீவிரித்து இயங்கத் தொடங்கின. குண்டுகளுக்குத் தேவையான அசிட்டோன் மருந்தை வீஸ்மான் தயாரித்துக் கொடுத்தார். தடையில்லா அசிட்டோன் உற்பத்தியால், தடையில்லாமல் குண்டுகள் தயாராகிக்கொண்டே இருந்தன. பிரிட்டனின் பீரங்கிகளும் தடையில்லாமல் தாக்கிக்கொண்டே இருந்தன. மாபெரும் தோல்வியிலிருந்து மாபெரும் வெற்றியை நோக்கி நகரத்தொடங்கியது இடையில் கேள்விக்குறியான வெற்றி டேவிட் லாயிட் ஜார்ஜ் மற்றும் செய்ம் வீஸ்மானின் வருகைக்குப் பிறகு பிரிட்டன் வசமாகத் தொடங்கியது. பிரிட்டிஷ் பேரரசின் ‘உலக வல்லரசு’ என்ற அரியணை செய்ம் வீஸ்மானால் காப்பாற்றப்பட்டது.
இரட்சகனாய் வெளிப்பட்ட இங்கிலாந்தின் யூதன்!
உண்மையில், பிரதமர் டேவிட் லாயிட் ஜார்ஜூக்கு பின்னணியில் இருந்து பிரிட்டனின் தோல்வி முகத்தை மாற்றி அமைத்தவர், செய்ம் வெய்ஸ்மான் என்ற யூதர் தான். இவருக்கும் பிரிட்டனின் உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கும் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த உறவுதான், உலக யுத்தத்தில் பிரிட்டனின் எழுச்சிக்கும், உலக அரங்கில் இஸ்ரேலின் பிறப்புக்கும் வித்திட்டது.
யார் இந்த செய்ம் வெய்ஸ்மான்?
யூதர்களின் பூர்வ நிலமான பலஸ்தீனாவில் அவர்களுக்கென அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடு அமைய வேண்டும் என்பதற்காக, 1897-இல் தியோடர் ஹெர்சல் என்பவர் சீயோனிஸ்ட் அமைப்பை துவக்கினார். இந்த அமைப்பில், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்துவந்த யூத அறிஞர்களும், கல்வியாளர்களும், செல்வந்தர்களும் அங்கம் வகித்து வந்தனர். அவர்களில் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த செய்ம் வெய்ஸ்மானும் ஒருவர். பின்னர் இவர் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தபோது, அந்நாட்டின் சீயோனிஸ்ட் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு அதன் தலைவராகவும் உயர்ந்தார். அமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டபோது, அவருக்கு அதிகாரமட்டத்தின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களோடு தொடர்புகள் ஏற்பட்டன.
வேதியியல் விஞ்ஞானியாக!
1904-ம் ஆண்டில் இங்கிலாந்தில் குடியேறிய வெய்ஸ்மான், மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியல் துறையில் மூத்த பேராசிரியராகப் பணியாற்ற அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், பல்கலைக்கழகப் பணியாளராக மட்டுமல்லாமல், தன் துறை சார்ந்த பல்வேறு ஆராய்ச்சிகளிலும் அவர் ஈடுபட்டு வந்தார். அவற்றில் தான் கண்டறிந்த வெற்றிகரமான புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்களையும் அவர் பெற்று வந்தார். வேதியியல் துறையில் பெயர் சொல்லத்தக்க வகையில் அவர் நிகழ்த்திய பல்வேறு பங்களிப்புகளுள் ஒன்று, ’அசிட்டோன்’ என்ற கரைப்பான் (SOLVENT) தயாரிப்பு. அது ’வெய்ஸ்மான் செயல்முறை’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
வெய்ஸ்மான் செயல்முறை
அன்றைய வேதியியல் உலகில், அசிட்டோன் என்ற வேதிப்பொருளானது, அசிட்டிக் அமிலத்தன்மை கொண்ட மரங்களை சில வேதியியல் செயல்முறைகளுக்கு உட்படுத்துவதன் மூலமாகவே தயாரிக்கப்பட்டு வந்தது. இதற்கு, டன் கணக்கில் மரங்கள் தேவை. 100 டன் மரங்களை செயல்முறைக்குட்படுத்தினால் ஒரு டன் அசிட்டோன் கிடைக்கும். அந்த மரங்களும் பரவலாக எல்லா நாடுகளிலும் இருக்காது. ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற குறிப்பிட்ட நாடுகளிலேயே வளரும். இந்த கடினமான செயல்முறைக்கு செய்ம் வெய்ஸ்மன் ஒரு எளிய மாற்று முறையை கண்டுபிடித்தார். மரங்களுக்கு பதிலாக மக்காச்சோள வகைகளையும் உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்தி அவர் அசிட்டோன் தயாரித்துக் காண்பித்தார். அதிலும் முக்கியமாக அவர் சோள வகைகளையே அதிகம் பயன்படுத்தினார். அசிட்டோன் உற்பத்தியில் செய்ம் வெய்ஸ்மென் புகுத்திய இந்த புதிய முறை “வெய்ஸ்மேன் செயல்முறை” என்று அழைக்கப்படுகிறது. வெய்ஸ்மனின் இந்த கண்டுபிடிப்பு, அறிவியல் மரபுகளுக்கே அப்பாற்பட்டதாக இன்றும் ஆச்சரியத்தோடு பார்க்கப்படுகிறது.
’மரவகை’ அசிட்டோனுக்கு, செய்ம் வீஸ்மானின் ’மக்காச்சோள’ அசிட்டோன் எந்த விதத்திலும் குறைந்திருக்கவில்லை. ஆம். அசிட்டோனுக்கான மரங்களை இனி எந்த நாட்டிலிருந்து பெறுவது என இங்கிலாந்து தவிக்க, அதே இங்கிலாந்தில் விளைந்த சோளத்தை வைத்தே அசிட்டோன் தயாரிப்பதில் வெற்றி கண்டிருந்தார் வெய்ஸ்மான்.
வெற்றிக்கூட்டணி
1916. ஆட்சியாளர்களின் கவனம் செய்ம் வெய்ஸ்மன் பக்கம் திரும்பியது. பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் வெய்ஸ்மனிடம், ’’அசிட்டோன் மருந்தை பெரிய அளவில் தயாரித்துத் தர முடியுமா’’ என்று கேட்க, அதற்கு ’’தேவையான சோளம் வகைகளும் தொழிற்சாலையும் கொடுத்தால் வேண்டிய அளவு தயாரித்துத் தருகிறேன்’’ எனக் கூறினார் வெய்ஸ்மன்.
ஆய்வகத்திற்குள் மட்டுமே அதுவரை பயணித்த வெய்ஸ்மன் செயல்முறை, விரைவான போர்க்கால விரிவாக்கத்திற்குட்பட்டு, தொழில்சாலைகளுக்கு நகர்ந்தது. பிரிட்டிஷ் பேரரசின் ஆளுகைக்குள் இருந்த எல்லா நாடுகளிலுமிருந்தும் சோள வகைகள் கொண்டு வரப்பட்டன. தொழிற்சாலைகள் தீவிரித்து இயங்கத் தொடங்கின. குண்டுகளுக்குத் தேவையான அசிட்டோன் மருந்தை வெய்ஸ்மன் தயாரித்துக் கொடுத்துக்கொண்டே இருந்தார். தடையில்லா அசிட்டோன் உற்பத்தியால், கோர்டைட் வெடிமருந்து உற்பத்தியும் அதிகரித்தது. கோர்டைட்டின் உற்பத்திப் பெருக்கத்தால் பீரங்கி குண்டுகளும் தயாராகிக்கொண்டே இருந்தன. பிரிட்டனின் பீரங்கிகளும் தடையில்லாமல் தாக்கிக்கொண்டே இருந்தன.
பால்ஃபோர் பிரகடனத்திற்கு வித்திட்ட கலந்துரையாடல்
வரலாறு காட்டியுள்ளபடி, செய்ம் வெய்ஸ்மானின் கண்டுபிடிப்பு அறிவியலுக்கு அப்பாற்பட்ட தாக்கங்களைக் கொண்டிருந்தது. அதனை அறிவியல் உலகம் இன்னும் ஆச்சரியமாகவே பார்க்கிறது. அறிவியல் உலகத்திற்கு அப்பாற்பட்டு, அன்றைய அரசியல் உலகத்திலும் அதன் தாக்கம் இருந்தது.
மாபெரும் தோல்வியிலிருந்தும் அவமானத்திலிருந்தும் மீட்கப்பட்டிருந்தது பிரிட்டன். இடையில் கேள்விக்குறியாகி இருந்த அதன் வெற்றி, செய்ம் வெய்ஸ்மானுடன் வின்ஸ்டன் சர்ச்சிலும் லாயிட் ஜார்ஜூம் வைத்த கூட்டணியால் பிரிட்டன் வசமானது. அதனால் பிரிட்டிஷ் பேரரசின் ‘உலக வல்லரசு’ என்ற பெருமைமிகு அடையாளம் காப்பாற்றப்பட்டது. நெருக்கடி காலத்தில் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றுக்கொண்ட டேவிட் லாயிட் ஜார்ஜ், அரசு தன் மீது வைத்த நம்பிக்கையை பூர்த்தி செய்ததால், யுத்தத்திற்குப் பிறகான அமைச்சரவையிலும் 1922 வரை பிரதமராக தொடர்ந்தார்.
இப்படிப்பட்ட அதிசய நிகழ்வுகளால், செய்ம் வீஸ்மான் அதிகார மட்டத்தின் பிரியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய மனிதராக உயர்ந்து நின்றார். அதனால் பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜூம், வெளிநாட்டுச் செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோரும், செய்ம் வீஸ்மானுக்கு நல்ல வெகுமதி கொடுக்க வேண்டும் என்று விரும்பினர். யுத்த முயற்சிக்கு அவர் அளித்த பங்களிப்புக்கு ஈடாக என்ன பெற விரும்புகிறார் என்று பால்ஃபோர் கேட்டபோது, டாக்டர் வெய்ஸ்மான், “நான் விரும்புவது ஒன்றுதான்: என் மக்களுக்கு ஒரு தேசிய வீடு” என தைரியமாக பதிலளித்தார். ஒட்டோமானியரிடமிருந்து விடுவிக்கப்பட்டு பிரிட்டிஷாரின் ஆளுகைகுள் வந்திருக்கும் பாலஸ்தீனத்தில் யூத மக்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்பதே அவரது ஒரே எதிர்பார்ப்பு. வெகுமதி. பிரதிபலன் எல்லாம்.
பால்ஃபோர் பிரகடனம்
வெய்ஸ்மானின் கோரிக்கைக்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக வெளிநாட்டுச் செயலாளர் ஜேம்ஸ் பால்ஃபோர் 9.12.1917-இல் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார். ’பால்ஃபோர் பிரகடனம்’ என்ற பெயரில் புகழ்பெற்ற பிரகடனமாய் உலக வரலாற்றில் இடம்பிடித்திருக்கும் இப்பிரகடனத்தின் சாராம்சம் – யூதர்கள் எந்த நாட்டிலிருந்தாலும், அவர்கள் அங்கிருந்து பலஸ்தீனாவிற்கு வந்து தங்கி, தங்களுக்கு அங்கே சொந்த வீடு கட்டிக் குடியிருப்பதற்கு பிரிட்டனுக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை என்பதே.
பால்ஃபோர் பிரகடனத்திற்கு எதிர்ப்பு
இப்படிப்பட்ட பால்ஃபோர் பிரகடனத்திற்கும் எதிர்ப்புகள் இருந்தன. அதுவும் யூதர்களிடம் இருந்தே! பிரிட்டன் வாழ் யூதர்களிடமிருந்தே! யார் அவர்கள்? தீவிரமான சீயோனிச எதிர்ப்பு இயக்கத்தினர். யூதர்களுக்கான தனி நாடு என்பதையே ஒரே நோக்கமாகக் கொண்டு, செய்ம் வெய்ஸ்மான் போன்ற யூதர்களின் தலைமையில் தீவிரமாய்ச் செயல்பட்டு வந்த சீயோனிஸ்ட் அமைப்புக்கு எதிரானவர்கள். அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவின் செயலாளரும், அமைச்சரவையில் பணியாற்றிய யூதர்களில் ஒருவருமான எட்வின் மொன்டாகு தலைமையில் ஒரு குழு பால்ஃபோர் பிரகடனத்திற்கு எதிர்த்து நின்று, முட்டுக்கட்டை போட்டார்கள். பிரிட்டிஷ் ஆதரவிலான இந்த சியோனிச நடவடிக்கை, பல்வேறு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நகரங்களில் குடியேறிய யூதர்களின் நிலைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும், போரில் பிரிட்டனுடன் போரிடும் ஆஸ்திரியா, ஜெர்மனி மற்றும் குறிப்பாக ஒட்டோமான் துருக்கியில் வசிக்கும் யூதர்களுக்கு எதிராக வன்முறைகள் நிகழலாம் என்றும் தாங்கள் அஞ்சுவதாக தெரிவித்தனர். எனினும், இவர்களின் எதிர்ப்பை முறியடித்ததுடன், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இத்தாலி (வத்திக்கான் உட்பட) ஆகியவற்றின் ஒப்புதலுடன், வெற்றிகரமான முறையில் லாயிட் ஜார்ஜின் அரசாங்கம் பால்ஃபோர் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றது.
ஆனால் முதல் உலக மகா யுத்தத்தினாலுண்டான சேதமோ:
- யுத்தத்தில் இறந்தவர்கள் 85,38,315 பேர்.
- யுத்தத்தில் அங்கவீனமானவர்கள் 2,02,29,482 பேர்
- யுத்தத்தில் காணாமற் போனவர்களும் யுத்தக் கைதிகளும் 77,50,919 பேர்
- மொத்தம் 3,65,18,716 பேர்.
- யுத்தத்தில் கலந்துகொண்ட தேசங்களின் இராணுவத்தினரின் எண்ணிக்கை 6,50,38,810 பேர்.
- மொத்தச் செலவு கணக்கே எவ்வளவென்றும் கணக்கிட முடியவில்லை.
இதன் பலா பலன் பிற தேசங்களில் எவ்வாறாயிருந்தாலும், ஆண்டவருடைய சித்தம் தாம் தெரிந்துகொண்ட மக்கள் திரும்ப அந்நாட்டிலே கூட்டிச்சேர்க்கப்பட வேண்டுமென்பதே.