
பிரிட்டன் இம்முறை ‘ஆபரேஷன் பலஸ்தீனா’ என்ற பெயரில் ஒட்டோமான் துருக்கி பேரரசுக்கு எதிராகக் களம் கண்டது. பலஸ்தீனாவையும் எருசலேமையும் மீட்பதே அதன் ஒரே நோக்கமாக இருந்தது. ஏனெனில், பலஸ்தீனா அப்போது ஒட்டோமான் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்தது. 1516-இல் பலஸ்தீனாவை கைப்பற்றிய ஓட்டோமானியர், 1917 வரை 401 ஆண்டுகள் அப்பிரதேசத்தை தங்கள் ஆளுகையிலேயே வைத்திருந்தனர். பலஸ்தீனா அவர்கள் ஆளுகையில் ஜெருசலேம், காசா மற்றும் நப்லஸ் என 3 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
மாபெரும் நோக்கத்தோடு புறப்பட்ட பிரிட்டன் இராணுவத்தை, ஓட்டோமான் இராணுவம் மார்ச் 1917 இல் நிகழ்ந்த ’முதல் காசா போரிலும்’, ஏப்ரல் 1917 இல் நிகழ்ந்த இரண்டாம் காசா போரிலும் தோற்கடித்து, அதன் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியது.
ஆபத்பாந்தவனாய் வந்த ஆலன்பி!
பின்னர் ஆங்கிலேயர்கள் மேற்கு முன்னணியில் போராடிய ஒரு முக்கியமான தளபதியான எட்மண்ட் ஆலன்பியை அனுப்பினர். எகிப்திய பயணப் படையின் ஜெனரல் எட்மண்ட் ஆலன்பி, 1917 ஜூன் மாதம் கெய்ரோவுக்கு வந்தபின், இடைவிடாமல் செயல்பட்டு ஜெருசலேமுக்கான வழியைத் திறக்க முயன்றார். இறுதியில் ஒட்டோமான் படையின் பாதுகாப்புகளை உடைத்தார். இந்நிலையில், பிரிட்டிஷ் பிரதமர் லாயிட் ஜார்ஜ் ஜெருசலேமை அந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென உத்தரவிட்டார்.
மூன்றாவது காசா போரில் வெற்றி!
ஒட்டோமான்கள் காசாவில் தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது, பிரிட்டன் இராணுவமோ, அக்டோபர் 31, அன்று பீர்ஷெபாவை கைப்பற்றினர். பீர்ஷெபாவை திரும்பப் பெற ஒட்டோமான் படைகள் நடத்திய தாக்குதல்கள் பலனளிக்கவில்லை.
இதற்கிடையில், ஆங்கிலேயர்கள் தங்கள் குண்டுவெடிப்பை தீவிரப்படுத்தி காசாவை இடிபாடுகளாக மாற்றினர். ஒட்டோமான் அலகுகள் பின்வாங்கியதால், அவர்கள் பெரும்பான்மையான உபகரணங்களை இழந்தனர். அத்துடன் கணிசமான மனித இழப்புகளையும் சந்தித்தனர். இப்படியாக, மூன்றாவது காசா போரில் பிரிட்டன் வென்றது. எருசலேமுக்கும் வழி திறந்தது.
எருசலேம் கைப்பற்றப்படுதல்
பிரிட்டிஷ் இராணுவத்தின் தரை மற்றும் கடற்படை பீரங்கிகள் மற்றும் விமானங்கள் இடைவிடாமல் துருக்கிய துருப்புக்கள் மீது குண்டு வீசின. ஏற்கெனவே, பசியோடும் நோயோடும் போராடிக் கொண்டிருந்த துருக்கியர், பிரிட்டிஷ் இராணுவத்தின் முப்படை தாக்குதல்களால் நிலைகுலையத் தொடங்கினர்.
நவம்பர் இறுதியில், பிரிட்டிஷ் படைகள் எருசலேமுக்கு அருகிலுள்ள கல்வாரியை கைப்பற்றினர். அதற்கு இஸ்லாமியர்கள் ‘இஸ்மாயில் மலை’ என பெயர் வைத்திருந்தனர். டிசம்பர் 8 இரவில் துருக்கி படைகள் எருசலேம் நகரத்தைக் கைவிட்டு வெளியேறினர். எருசலேமை கைப்பற்றுவதற்கான யுத்தம் மட்டுமே அக்டோபர் 31 தொடங்கி, டிசம்பர் 8 வரை நிகழ்ந்திருந்தது. தங்கள் மூன்றாவது முக்கிய நகரமான எருசலேமை தக்கவைத்துக்கொள்ள போராடிய ஒட்டோமான் துருக்கியர், அதற்காக தங்கள் தரப்பில் 25 ஆயிரம் பேரை இழந்தனர்.
எருசலேமிற்குள் காலடி எடுத்துவைத்த ஆலன்பி!
டிசம்பர். 11 ஜெனரல் ஆலன் பி ஜஃபா வாசலுக்குக் கால்நடையாகவே கடந்து சென்றார். அந்த வாசல் வழியாக அவர் ஜெருசலேம் நகரத்திற்குள் நுழைந்தார். கிறிஸ்தவர்களின் புனித நகரமான எருசலேம் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததில் ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகள் எல்லாம் மகிழ்ச்சியடைந்தன. ஐரோப்பிய பத்திரிக்கைகள் இச்செய்தியை மகிழ்ச்சியோடு வெளியிட்டன. எருசலேமிற்கான யுத்தத்தை அவர்கள் சிலுவைப்போரோடும், ஆலன்பியை அவர்கள் முதல் சிலுவைப்போரில் எருசலேமைக் கைப்பற்றிய காட்ஃப்ரே பவுல்லனினோடும் ஒப்பிட்டன. பல நூற்றாண்டுகளுக்கு சிலுவைப்போரைத் தொடங்கிவைத்த மற்றும் அதில் தோல்வியுற்ற ஆங்கிலேய மன்னன் ரிச்சர்ட் தி லயன்ஹார் என்பவனின் முடிக்கப்படாத சிலுவைப்போரை ஆலன்பி முடித்து வைத்ததாகக் கூறின.
முடிவுக்கு வந்த ஒட்டோமான் ராஜ்ஜியம்!
400 வருடங்களாக பலஸ்தீனாவை தன் ஆளுகையின் கீழ் வைத்திருந்த ஓட்டோமான் அதனை பிரிட்டனிடம் இழந்தது. அதைவிட எந்த எருசலேமை இழந்து விடவே கூடாது என அவர்கள் போரிட்டார்களோ, அந்நகரத்தையும் இழந்தனர். பலஸ்தீனாவை மட்டுமல்ல. ஒட்டோமான் துருக்கி பேரரசு மொத்தமாகவே முடிவுக்கு வந்தது. எந்த துருக்கியிடம் அவமானகரமான தோல்வியை சந்தித்ததோ, அதே துருக்கியை முற்றிலுமாக வீழ்த்தியது பிரிட்டன். கி.பி. 1322-இல் எழும்பிய இந்த பேரரசு, முதலாம் உலக யுத்தம் வரை அசைக்
ஒரே யுத்தம். த்தில், நெருக்கடி காலத்தில், யுத்த அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட டேவிட் லாயிட் ஜார்ஜ், தன் மீதான நம்பிக்கையை பூர்த்தி செய்ததால், யுத்த வெற்றிக்குப் பிறகாகவும் அவருடைய பதவி 1922 வரை நீட்டிக்கப்பட்டது. இப்படி எல்லா வகையிலும் லாயிட் ஜார்ஜ் மற்றும் இங்கிலாந்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த செய்ம் வீஸ்மான், அதிகார மட்டத்தின் மதிப்பிற்குரிய மனிதராக உயர்ந்து நின்றார்.